Stay tuned for the new Update Follow

Star Rating

அட்சய திருதியை அதிர்ஷ்டம்(தங்கம்) கொண்டு வருமா..???

Admin
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 


அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வ வளம் ஆண்டு முழுக்க சேர்க்கும் என்பது பலரது நம்பிக்கை. அதனால்தான் அட்சய திருதியை நாளில் கடைகளில் கூட்டம் கலை கட்டுகிறது.

இந்த நாளில் நகை வாங்கினால் தான் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை சரியா? தவறா? என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்கத் தேவையில்லை. ஆனால் இப்படி நகைகளை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை என்பது உணர வேண்டும்

இந்த எச்சரிக்கை விழிப்புணர்வை தங்க நகைகளுக்கு தர நிர்ணயம் செய்யும் இந்திய தர நிர்ணய அமைப்பான பி ஐ எஸ் (BIS) உடன் இணைந்து பிட் கார்ட் என்கிற நுகர்வோர் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.

அதிர்ஷ்டம் சேர்த்து நகை வாங்கினாலும், தரமான ஹால்மார்க் நகைகளை பார்த்து வாங்குவது நல்லது. பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய தங்கம் ஒரு வழி என்று கூறலாம். உண்மைதான் ஆனால் ஒரு பொருளில் முதலீடு செய்பவர்கள் அது மிகக் குறைந்த விலையில் விற்கும் போதுதானே வாங்க வேண்டும்.

என்றைக்கு தங்கம் விலை குறைவாக இருக்கிறது. அன்றுதான் அதை வாங்க நல்ல நாள் என்பது தானே புத்திசாலித்தனம். பொதுவாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சியை திருதி நெருங்க நெருங்க தங்க விலை ஏறுவதும். அதன் பிறகு 10,15 நாட்களில் விலை இறங்குவதும் வாடிக்கையான ஒரு நிகழ்வாக இருக்கிறது. லாபகரமான தங்கம் வாங்குவது என்றால் அட்சியை திருதியை முடித்து சில வாரங்களில் விலை குறையும் போது வாங்குவது நல்லது.

நகை வாங்கும் போது நம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்....

பி ஐ எஸ் (BIS) எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் The Bureau of Industry and Security (BIS) என்னும் அமைப்பு நகையின் தரத்திற்கு வழங்கும் முத்திரை ஹால்மார்க் முத்திரை எனப்படும். இந்த முத்திரை தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது

இதில் ஐந்து விஷயங்களை கவனிக்க வேண்டும்.

1. பி ஐ எஸ் முத்திரை லோகோ

2. தரக்குறியீடு பியூரிட்டி ஆஃப் கோல்டு (உதாரணமாக 916 என்றால் 22 கேரட் தூய தங்கம் என்று அர்த்தம்)

3. தரத்தை சோதனை செய்த ஆய்வகத்தின் முத்திரை

4. ஹால்மார்க் முத்திரை பதித்த ஆண்டைக் குறிக்கும் எழுத்து

5. நகை விற்பனையாளர் கடையின் முத்திரை


நகை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் மேலே கண்ட ஐந்து விஷயங்களும் இருக்கும் பூதக்கண்ணாடி உதவியுடன் இதையெல்லாம் சரி பார்த்தே அது ஹால்மார்க் நகையா என்று உறுதி செய்து வாங்க வேண்டும். தங்க நகையின் தரம் எடையில் குறைவு, சந்தேகம் அல்லது வேறு ஏதாவது குறைபாடு என்றால் கீழே கண்ட முகவரியில் புகார் செய்யலாம்.


இந்திய தர நிர்ணய ஆணையம் பி ஐ எஸ்

சி ஐ டி வளாகம் நான்காவது குறுக்குத் தெரு

தரமணி சென்னை 600 113

044 22541216 93800 82849


இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

நகையை அடகு வைத்து தங்கம் வாங்குவது வேண்டாம்....

பல நேரங்களில் பலர் தங்க நகை வாங்குவதற்கு கையில் பணம் இல்லாமல் இருப்பார்கள். அப்போது அவர்கள் கையில் இருக்கும் நகையை வங்கியில் அடமானம் வைத்து நகை வாங்குவார்கள்.

இது அவ்வளவு புத்திசாலித்தனமான செயல் கிடையாது. தங்க அடமானக் கடனுக்கு ஆண்டுக்கு வட்டி சுமார் 11% முதல் 13% இருக்கும் இதைவிட அதிகமாக தங்கத்தின் விலை அதிகரித்தால் தான் லாபம் இல்லை என்றால் இழப்புதான்.

மொத்தமாக நகை வாங்க கையில் ரொக்கப் பணம் இல்லாதவர்கள், தங்க நகை சீட்டு சேர்ந்து மாதம் பணம் கட்டி 12 மாதங்கள் அல்லது 18 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் கழித்து நகை வாங்குவது நல்லது அல்லது பணத்தை வங்கி அல்லது தபால் அலுவலக ஆர் டி (Requiring Deposit) திட்டத்தில் போட்டு வந்து ஓராண்டு கழித்து மொத்த தொகை சேர்ந்ததும் நகை வாங்கிக் கொள்ளலாம்.

இப்போது வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் ஓராண்டு ஆர்டி திட்டத்தை வைத்திருக்கின்றனர். இவற்றில் குறுகிய கால தேவைக்கு ஆர்டியில் பணம் போட்டு வரலாம்.

அடிக்கடி தங்க நகையை மாற்றுவது முதலுக்கே நட்டம்...

சுமார் 90 சதவீதத்தினர் தங்கத்தை ஆபரணமாக தான் வாங்குகிறார்கள் அப்போது சுமார் 20 சதவீதம் சேதாரமாக கொடுக்கிறார்கள்.

வாங்கி இந்த நகையை ஒன்று அல்லது இரு ஆண்டுகளில் மாற்றிவிட்டு புது நகை எடுக்கிறார்கள். விற்கும்போது பழைய நகை என சுமார் 3 முதல் 5 சதவீதம் கழிவு போய்விடுகிறது. அதே அளவிற்கு நகை ஏற்கெனவே கொடுத்த சேதாரம் 20% கழிவு 5% என 25% தொகையை புதிதாக போட வேண்டி இருக்கும். இப்படி நான்கு முறை நகை மாற்றப்பட்டால் முதலிருக்கே நஷ்டமாகிவிடும்.

இதைத் தவிர்க்க குறைந்த சேதாரம் உள்ள நகை வாங்குவதோடு அடிக்கடி நகையை மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.