Stay tuned for the new Update Follow

Star Rating

உங்கள் நல்ல நேரத்தை கண்டுபிடிக்க இது உதவும் - நேர மேலாண்மை - success tips in time management

Admin
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

நேர மேலாண்மை (Time Management) ஆனது ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடிக்க வேண்டும். ஒருவேளை கால அளவை பின்பற்றாமல் போனால் எவ்வளவு நேரம் வீணாகி இருக்கும் என்பதை புரிந்து அதை சரிவர கையாள்வது டைம் மேனேஜ்மென்ட் ஒரு முக்கிய பங்கு வைக்கிறது.


நீங்கள் அரை மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை கவனச் சிதறல் காரணமாக, இரண்டு மணி நேரத்திற்கு செய்திருந்தால், அதுவும் நேரத்தை வீணடிப்பதற்கு சமம் தான். எங்கெல்லாம் நேரத்தை வீணடிக்கிறோம் என்பதை ஒருவர் கண்டறிவது நேர மேலாண்மையின் முதல் படி.


நாளைக்கான பணிகளை திட்டமிடுங்கள்

அடுத்த நாளுக்கான, 

அடுத்த மாதத்திற்கான, 

அடுத்த ஆண்டுக்கான இலக்குகள் உங்களுக்கு இருக்க வேண்டும். நாளைய வேலைகளை இன்றே திட்டமிடும்போது தான். அடுத்த நாள் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். எப்போதும் முதல் நாளே திட்டமிடுவது, உங்களது நேரத்தை முழுமையாக பயன்படுத்த உதவும். மாணவர்களை பொறுத்த வரை அடுத்த நாளுக்கான பணிகளை முதல் நாள் மாலையில் இருந்து செய்து முடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அந்தந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகளை அன்றே முடிக்க வேண்டும். இதற்கு பெற்றோர் உதாரணமாய் இருப்பதுடன் குழந்தைகள் நேர மேலாண்மையை பின்பற்ற அவர்களை கவனித்து வழிநடத்தலாம். திட்டமிட்டு செயல்படுபவர்களால் நிறுவனத்தில் வேலைகளை தாமதம் இன்றி முடிக்கும்.


சோம்பல் விரட்டு

நாம் திட்டமிட்ட பணிகளை முழுமையாக முடிக்க அந்தத் திட்டமிட்டளை பின்பற்றுவது அவசியம். நமது நேரம் அதிகம் வீணாகக் காரணமாக இருப்பது என்ன என்று கண்டறிந்து சரி செய்ய வேண்டும். நம்மில் உண்டாகும் கவனச் சிதறல் நாம் திட்டமிட்ட வேலைகளை முழுமையை முடிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க செய்யும் இதனால் நேரம் வீணாகி வேலையும் முடியும் முடியாது. சோம்பல் குணம் அந்த வேலையை அப்போதைக்கு முடிக்காமல் தள்ளி போட சொல்லும் சோம்பலின் அளவு சிலருக்கு மாறுபடும் சோம்பலின் விளைவுகள் உணர்ந்து சிலர் தம்மை மாற்றிக் கொள்வதுண்டு. ஆனால் ஒரு சிலர் யார் என்ன சொன்னாலும் தம்மை மாற்றிக் கொள்ளாமல், வீடு, பள்ளி, அலுவலகம் என எல்லா இடத்திலும் கவலை உணரப்படுகின்றனர். சோம்பல் விரட்டவும் கவனச் சிந்தனை குறைக்கவும் தேவையான உத்திகளை பயன்படுத்துங்கள்


வேலைக்கான டெட்லைன் - work deadline

உங்கள் வேலைகளை அவற்றுக்கான முக்கியத்துவத்துடன் பட்டியலிட வேண்டும். எதை முதலில் முடிப்பது, எது கடைசியில் என அந்த பட்டியலில் இருக்க வேண்டும். இன்றே முடித்தாக வேண்டிய வேலைகளை முதன்மையாகவும் ஒரு வேலை முடிக்க முடியாமல் போனால் அடுத்த நாள் செய்தால் செய்வதால் பாதிப்பு இல்லை என்னும் நிலையில் உள்ள வேலைகள் வார இறுதியிலும் வைத்துக் கொள்ளலாம். ஒரு வேலை தடைப்பட்டு போனால் அடுத்தடுத்த வேலைகளும் தடைப்படும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது முக்கியம். ஒரு வேலையை மெதுவாக செய்வது அதாவது இஷ்டத்துக்கு செய்வது, வேலைக்கு இடையில் வேறு ஒரு வேலையை பார்ப்பது போன்ற தகவல் தகவல்களைத் தடுக்க வேண்டும். நாம் எடுத்த வேலையை முழுமூச்சாக அதாவது ஆழமாக வேறு எந்த அலைபாயுதலும் இன்றி செய்து முடிக்க வேண்டும். எந்த வேலையும் வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்கும்.


புத்துணர்வுக்கான இடைவேளை

வேலைகளை தொடர்ச்சியாக செய்வது சலிப்பை ஏற்படுத்துவதுடன் வேலையின் வேகத்தையும் குறைக்கும். வேலைக்கு இடையில் சிறிய பிரேக் எடுத்துக் கொள்வது மனதிற்கு புத்துணர்வு அளிக்கும். மீண்டும் தொடரும் போது வேலை வேகத்துடன் வேலையை முடிக்க முடியும் இந்த இடைவேளை உதவும்.


வேலையும் உடல் நலமும்

வேலையில் கவனமாக இருப்பது போலவே, உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனமாய் இருப்பது அவசியம். உடல்நலம் பாதிக்கப்பட்டால் அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டி வரும் உடல் தொந்தரவுகள் காரணமாக வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியாது. உடல் நலம் பாதிக்கப்பட்டால், நேர மேலாண்மையை முழுமையாய் கடைபிடிக்க முடியாது அத்தியாவசிய தேவை இன்றி விடுமுறை எடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்துவதும் அவசியம். இதற்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்


நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தபவர்கள் எந்த துறையிலும் பெரிய அளவில் சாதிக்க முடியும்.

நல்ல நேரம்

ஒரு செயலை செய்ய நினைத்து அதை தொடங்கும் எந்த ஒரு நேரமும் நல்ல நேரம் தான். மருத்துவமனையில் அவசரப் பிரிவில் இருக்கும் மருத்துவர் தன்னிடம் அவசர நிலையில் வந்திருக்கும் நோயாளியிடம் நல்ல நேரத்தில் மருத்துவம் பார்க்க ஆலோசனை செய்து கொண்டிருந்தால், மருத்துவரின் நல்ல நேரம் நோயாளியின் மரண நேரம் ஆகிவிடும். எனவே ஒரு செயலை அப்பொழுதே தொடங்கி, முழுவதுமாய் செய்து முடிப்பது நல்லது.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.